கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநிலத்தில் பிஜ்வாசன் பகுதியில் வால்மிகி காலனியில் மின்சாரக் கோளாறால் ஏற்பட்ட தீ மளமளவென அருகில் உள்ள குடிசைகளுக்கு பரவியதில் வீட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் இந்த தீ விபத்தில் அந்த குடிசைகளில் ஒரு குடிசையில் வசித்து வந்த கமலேஷ், மனைவி பூதானி, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளிட்ட 6 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன்பின் தீயில் கருகிய 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு சப்தர்ஜங் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.