திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை டாடா சுமோ கார் ஓன்று 3 குழந்தைகள் உள்பட 8 பேருடன் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மேலும் காயமடைந்த 2 குழந்தைகள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடந்த இந்த கோர விபத்து நிகழ்ந்ததற்கு டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே காரணம் என கூறப்படுகிறது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார். ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.