Categories
தேசிய செய்திகள்

பெண்ணுடன் உறவில் இருந்த இளைஞர்… அடித்து துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வைத்த கும்பல்..!!

பெண்ணுடன் உறவில் இருந்த இளைஞரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவைத்த 6 பேரை  கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்..

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் தனது சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் உறவில் ஈடுபட்டுகொண்டிருந்ததற்காக 20 வயதுடைய இளைஞரை ஒரு கும்பல் சிரோஹி மாவட்டம் சர்தார்புரா கிராமத்திற்கு கடத்திச் சென்றது.. பின்னர், அந்தநபரை அந்த கிராமத்தில் வைத்து வலுக்கட்டாயமாகச் செருப்பால் அடித்து துன்புறுத்தி அந்த கும்பல் சிறுநீர் குடிக்கவைத்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.

இது குறித்து போலீசார் கூறுகையில், “இந்தச் சம்பவம் ஜூன் 11ஆம் தேதி நடந்துள்ளது. இதில் தொடர்புடைய 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.. குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் சிரோஹி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |