பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோஷிஸ்தான் மாவட்டத்தில் உள்ள சாலை வழியாக காரில் சென்றுள்ளனர். இதையடுத்து கார் லோட்டர் என்ற பகுதியில் மலைப்பாங்கான சாலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் காரில் பயணித்த பெண் மற்றும் குழந்தை உட்பட 6 பேர் உடல் நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேரை சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.