Categories
சினிமா தமிழ் சினிமா

வேதனையில் எஸ்.கே 20 ஹீரோயின்…. ஆறுதல் கூறும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்…. என்ன காரணம்….!!!

சிவகார்த்திகேயனின் எஸ் கே 20 படத்தின் கதாநாயகி உருக்கமாக தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்பொழுது அனுதீப் இயக்கத்தில் தனது 20-வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து எஸ் கே 20 படத்தின் கதாநாயகியாக நடிப்பவர் உக்ரைனை சேர்ந்த நடிகை மரியா ரியாபோஷப்கா. இவரை படக்குழுவினர் ஒரு தேவதை வந்து விட்டதாக கூறி மரியாவை அறிமுகம் செய்தனர். இதற்கிடையில் மரியா உக்ரைனில் நடக்கும் போரினால் வேதனையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மரியா தனது இணைய தள பக்கங்களில் எஸ் கே 20 படத்தில் நடிப்பது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உக்ரைனில் நடந்து வரும் மோசமான சூழ்நிலைகளுக்கு இடையில் நான் உங்களுடன் நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் எஸ் கே 20 படத்தில் நான் நடிக்கிறேன். இவர்களைப் போன்ற சுவாரசியமான மனிதர்களை பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி. உங்களின் ஆதரவுக்கும், அக்கறைக்கும் நன்றி. நீங்கள் தான் சிறந்த படக்குழு. நான் என் நாட்டை ரொம்பவும் மிஸ் செய்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மரியாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் பிப்ரவரி மாதம் எஸ் கே 20 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நவீன் பாலிஷெட்டி, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் படத்திற்கு முதல் முறையாக தமன் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |