Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷுடன் நடிக்க நோ சொன்ன சிவகார்த்திகேயன் ஹீரோயின்…. யாருன்னு தெரியுமா….?

தனுஷுடன் நடிக்க பிரபல நடிகை மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இவர் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கவுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

துபாய் போனதும் கிளாமருக்கு மாறிய பிரியங்கா மோகன்: வைரல் புகைப்படங்கள்! -  News - IndiaGlitz.com

ஆனால், இந்த படத்தில் அவர் தன்னால் நடிக்க முடியாது என கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, உப்பேனா படம் புகழ் கீர்த்தி செட்டியிடம் இந்த படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னரும் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிப்பார் என கூறப்பட்டது.

Kriti Shetty Pair With Dhanush | Kalakkal Cinema News

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |