Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ‘மெர்சல்’ வில்லன்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் எஸ் .ஜே .சூர்யா இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . இதையடுத்து  நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது .

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ பட நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |