Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எஸ்.ஐ. ரகு கணேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் – மாஜிஸ்திரேட் ஹேமா உத்தரவு

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று காலை சாத்தான்குளம் வரைந்த சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாக விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இதில் முக்கிய காவல் அதிகாரியாக இருக்கும் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகினார்.

உதவி ஆய்வாளரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்ததாக சொல்லப்பட்டது, அதேபோல விசாரணைக்காக கஸ்டடியில் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் உதவி ஆய்வாளர் ரகுகணேசை கைது செய்ததை உறுதிபடுத்திய சிபிசிஐடி போலீசார் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்காக காவல் துணை ஆய்வாளர் ரகு கணேஷுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர் மாஜிஸ்திரேட் ஹேமா முன் ஆஜர்படுத்தப்பட்ட போது, சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் என தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஹேமா உத்தரவு பிறப்பித்தார். வரும் 16-ம் தேதி ரகு கணேஷை மீண்டும் ஆஜர்படுத்த உத்தவிட்டார். 

Categories

Tech |