Categories
உலக செய்திகள்

‘3 மணி நேரம் மட்டுமே அனுமதி’…. ஆன்லைன் விளையாட்டு…. கட்டுப்பாடு விதித்த சீனா அரசு….!!

இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகள் விளையாட வேண்டும் என்று சீனா அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

உலக அளவில் அனைத்து குழந்தைகளும் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டனர். இதனால் அவர்களின் மனநலமும் உடல் நலமும் பாதிக்கப்படுவதாக பல்வேறு செய்திகளின் மூலம் அறிகிறோம். இந்த நிலையில் சீனாவில் 18 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாகமான நேரங்கள் ஆன்லைன் விளையாட்டுக்களில் செலவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற கிழமைகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் அதிக அளவு நேரத்தை செலவிடுவதாக தெரிய வந்துள்ளது.

இதனை அறிந்த சீனா அரசு மிகவும் கவலையடைந்தது. ஆகவே இதனை உடனே கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்குட்பட்டவர்கள் வாரத்தில் மூன்று மணி நேரம் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டும் என்று சீனா அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதை தடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |