மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நூலஅள்ளி பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கவியரசு என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக சிறுவனுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது.
இதனால் சிறுவன் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் கவியரசு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவ்வாறு மர்ம காய்ச்சலால் இறந்த சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.