ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2006 ஆம் ஆண்டு மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்த துறைக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கூடுதல் பொறுப்பை வகித்து வருகிறார். இந்த அமைச்சகத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. இந்த துறையின் கீழ் வக்பு வாரியம் மற்றும் தேசிய சிறுபான்மை ஆணையமும் செயல்பட்டு வருகிறது. மத்திய சமூக நிதி அமைச்சகத்தில் இருந்து சிறுபான்மையினர் நல அமைச்சகம் உருவாக்கப்பட்டது. தற்போது மத்திய பாஜக அரசின் இந்த துறையை ஒழிக்கும் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சிறுபான்மையினர் நலனுக்காக தனி அமைச்சகம் தேவையில்லை.
மத்திய அரசின் திட்டமாக சமூக நலத்துடன் கீழ் மீண்டும் இந்த துறை செயல்பட வேண்டும் என்று ஊடகங்களில் செய்திகள் பரவியது. இதனால் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் எழுந்தது. ஆனால் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தால் தான் செயல்படுத்தப்படும். அனைத்து மாநிலங்களும் நலத்திட்டங்களும் தொடரும். அவற்றை மத்திய அரசால் ஒழிக்க முடியாது. நிர்வாக வசதிக்காக இந்த மாற்றம் செய்யப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினர் நலத்துறையை மத்திய அரசு ரத்து செய்யப் போவதாக சில ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது. இது முற்றிலும் உண்மைக்கும் புறமானது. மத்திய அரசு சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தை ரத்து செய்து மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்துடன் இணைக்க போவதாக டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டு உள்ளது.