Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியவரிகம் பகுதியில் இருக்கும் தனியார் காலணி தொழிற்சாலையில் 17 வயதுடைய சிறுமி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அதே தொழிற்சாலையில் பணிபுரியும் யுவராஜ் என்பவர் சிறுமியை ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். அதன்பின் பணிக்கு சென்ற சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று யுவராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதற்கிடையே தனது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக யுவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |