16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகாவில் தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். இவர் 16 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
இது பற்றி சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.