Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலி…. டிரைவரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

மாணவியை கற்பழித்த டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் தனியார் பேருந்து டிரைவர் ஒருவர் தனது அக்காள் மகளான 17 வயது பிளஸ்-2 மாணவியை ஆசை வார்த்தைகளைக் கூறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அங்கு சிறுமி கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்படி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி மற்றும் காவல்துறையினர் பேருந்து டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கின்ற டிரைவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |