Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிறுமிகள் மரணம் … குளத்தில் நடந்த கொடூரம்… செங்கல்பட்டில் சோகம்…!!

குளத்தில் குளிக்கச் சென்ற சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த  சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள   ஆலத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹரிசங்கர் என்பவ ரது மகள்களான  ராகினி மற்றும்  ரம்யா.  அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது  மகள் சாதனாவுடன்  அப்பகுதியில் உள்ள  குளத்திற்கு குளிக்க சென்ற்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள்  நீரில் மூழ்கினர்.

அவர்களின் சத்தம் கேட்ட,  அப்பகுதி மக்கள் மூன்று சிறுமிகளையும் குளத்திலிருந்து மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் சிறுமிகளை பரிசோதித்து பார்த்தபோது, வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் தொடர்பாக திருப்போரூர் மாவட்ட காவல் துறையினர்  விசாரணை செய்து வருகின்றனர். மூன்று சிறுமிகளும் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |