Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரின் தம்பி…. மருத்துவரை திருமணம் செய்த நடிகர்…. வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்….!!

தமிழ் மற்றும் மலையாள நடிகரான பாலா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படமானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம், தம்பி போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். மேலும் இவர்  மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்திலும் பாலா நடித்து வருகிறார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இதனையடுத்து இவர் கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்னும் மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் பாலாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படமானது வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதன் மூலம் அவருக்கு திருமணம் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது.

Categories

Tech |