சிரியாவின் அதிபரான பஷார் ஆசாத்தின் சித்தப்பாவான Rifaat Assadதிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
சிரியாவின் மறைந்த முன்னாள் அதிபர் ஹபீஸ் ஆசாத்தின் இளைய சகோதரர் Rifaat Assad. இவர் 1984 ஆம் ஆண்டு மார்ச்சில் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு நாட்டை விட்டு வெளியேறி பிரான்ஸில் குடிபுகுந்தார். மேலும் Rifaat Assadதின் சகோதரரும், மறைந்த முன்னாள் அதிபருமான ஹபீஸ் ஆசாத் தற்போது இருக்கும் சிரியா அதிபரான பஷார் ஆசாத்தின் தந்தை என்பது அனைவரும் அறிந்திராத ஒன்றாகும். இதனையடுத்து 1986 ஆம் ஆண்டில் பிரான்ஸ் அதிபர் François Mitterrand , Rifaat Assadக்கு the Grand Cross of the National Order of the Legion of Honour என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தினார். இதற்கிடையில் பிரான்ஸில் வரி மோசடி மற்றும் லஞ்சம் வாங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும் 2017ல் ஸ்பெயினில் இருக்கும் Rifaat Assadவிற்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் மோசடி வழக்கிற்காக கைப்பற்றப்பட்டது. அதிலும் பிரான்ஸ்க்கு நாடு கடத்தப்பட்ட சிரியாவின் முன்னாள் துணை ஜனாதிபதியான Rifaat Assad பண மோசடி, சிரியாவின் பொது நிதியை அபகரித்தது, மோசமான வரி எய்ப்பு போன்ற குற்றங்கள் அவர் மீது நிரூபிக்கப்பட்டது. குறிப்பாக 90 மில்லியன் யூரோ மதிப்புடைய சொத்துக்களை மோசடி செய்ததற்காக கடந்த 2020ல் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அவரின் மேல்முறையீடு மனுவை நிராகரித்து பாரீஸ் நீதிமன்றம் Rifaat Assadன் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.