நாகையில் திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 315 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது .
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவரான தியாகராஜன் தலைமை தாங்கியுள்ளார். இந்த தடுப்பூசி முகாமை வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி லியாகத்அலி நேரில் பார்வையிட்டார்.
இந்த முகாமில் 315 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது .அத்துடன் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது .மேலும் இந்த முகாமிற்கு மருத்துவர்கள் விஜய், பாஸ்கரன், விநாயகவேலவன் ,ஊராட்சி செயலாளரான மகேஸ்வரி, துணைத் தலைவர் அமுதா முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் சுப்ரமணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர் .