மனிதர்கள் செய்யகூடிய பாவங்களில் இருந்து அவர்களை மீட்க மனிதனாகவே அவதரித்தவர் தான் இயேசு. இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர். அவரின் பிறப்பு விழா தான் கிறிஸ்துமஸ் ஆகும். கிறிஸ்துவத்தின் முதல் 2 நூற்றாண்டுகளில் இயேசுவின் பிறந்தநாளை அங்கீகரிப்பதற்குப் பல்வேறு எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தது. எனினும் அதையெல்லாம் கடந்து 2ம் நூற்றாண்டில் டிச..25-ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
தற்போது சிறப்பான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை விரும்புபவர்கள் தவறாமல் போகவேண்டிய இடங்கள் சிலவற்றை நாம் தெரிந்துகொள்வோம். அந்த வகையில் மேகாலயா மாநிலத்திலுள்ள ஷில்லாங் என்ற நகரில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். இதனால் இங்கு சென்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்பது புதுமையான அனுபவத்தை தரும்.
இதையடுத்து ஆண்டின் 365 நாட்களில் கோவாவுக்கு எப்போது சென்றாலும் கொண்டாட்டம்தான். அதிலும் குறிப்பாக பார்டி நகரமான அங்கு டிசம்பர் மாதம் போனால் கொண்டாட்டத்தின் உச்சத்தை காணலாம். கடற்கரையோரம் இரவு வேளையில் கிறிஸ்துமஸ், நியூ இயர் பார்ட்டிகள் புதுவித அனுபவத்தை தரும்.
அதன்பின் தென் இந்தியா பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பெரிய அளவில் இருக்கும் பகுதியாக கேரளா இருக்கிறது. அடுத்தபடியாக சிம்லாவில் பிரிட்டீஷ் காலத்து கபேக்கள், ரெஸ்ட்ராண்ட்களில் சூடான காபி, இனிப்பு வகைகளை சாப்பிட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபடலாம்..