தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் “வால்டேர் வீரய்யா”. இப்படத்தை டைரக்டர் பாபி என்ற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர். இவற்றில் சிரஞ்சீவிக்கு ஜோடி ஆக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
இந்த”படத்தின் முதல் பாடலான ‘பாஸ் பார்ட்டி” பாடலின் லிரிக்கல் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் 2ஆம் பாடல் பற்றிய புது அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, ஸ்ரீதேவி சிரஞ்சீவி என்ற பாடல் இன்று (19/12/2022) வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இத்திரைப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.