Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர் குற்ற செயல்கள்…. சூப்பிரண்டின் பரிந்துரை…. ஆட்சியரின் உத்தரவு….!!

சிறையிலிருக்கும் கஞ்சா வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புகானா பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா விற்பனை செய்ததால் இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையிலான காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்‌.

இதனையடுத்து ஆனந்தராஜின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் படி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் அதன்படி ஆனந்தராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |