சிறைச்சாலையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் தெற்கு பகுதியில் உள்ள ஈகுவடா நகரின் குயாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதை பொருள், கடத்தல் போன்ற பல்வேறு பயங்கர குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தங்களுக்குள் இரு குழுவாக பிரிந்து அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இருதரப்பினரிடையே பலத்த மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலில் ‘லாஸ் வெகோஸ் ‘ மற்றும் ‘லாஸ் கேனரஸ் ‘ என்று அழைக்கப்படும் இருதரப்பு கைதிகள் கத்தி போன்ற பலத்த ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு கையெறி குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர். இந்த கலவரமானது சிறைச்சாலையில் உள்ள காவலர்களையும் மீறியதால் கலவர தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதனையடுத்து 5 மணி நேரம் முயற்சிக்கு பின்னர் கலவரமானது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த கலவரத்தில் 116 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.