Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 30 வருடம் கழித்து…. சிறைக்கு சென்ற நபர்…. பின்னணியிலுள்ள காரணம்….!!

30 ஆண்டுகளுக்கு முன்னர் சிறையிலிருந்து தப்பிச் சென்ற ஆஸ்திரேலிய நபர் ஒருவர் தற்போது கொரனோ வைரஸினால் அவதிப்பட்டு மீண்டும் சிறைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டில் டார்க்கோ டக்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செய்த குற்றத்திற்காக கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள சிறை ஒன்றில் காவல்துறை அதிகாரிகளால் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் எப்படியோ டார்க்கோ டக்கி சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து இவர் தன்னுடைய பெயரை கூட வெளியே சொல்லாமல் தன்னால் முடிந்த வேலைகளை மட்டும் செய்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இவருடைய வாழ்க்கை மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றுள்ளது.

ஏனெனில் அனைத்து நாடுகளும் கொரோனாவை விரட்டியடிக்க பலவித கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் சிறையிலிருந்து தப்பிச் சென்ற டக்கி வேலையை இழந்து வீட்டு வாடகையை கூட கொடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து தன்னுடைய நிலைமையை கண்டு மனமுடைந்த டக்கி சிறையிலிருப்பதே மேல் என்று நினைத்து 30 வருடங்களுக்கு பின்பாக தற்போது காவல் நிலையத்தில் சென்று தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார்.

Categories

Tech |