Categories
தேசிய செய்திகள் பல்சுவை வரலாற்றில் இன்று

ஐயா அப்துல்கலாமின் ”அட்டகாசமான” பொன்மொழிகள் …..!!

அப்துல்கலாம் ஐயாவின் பிறந்த நாளான ( 15/10 ) இன்று அவரை குறித்த செய்தி தொகுப்பை பார்ப்பதில் நாம் அனைவருக்கும் மகிழ்ச்சியே…!!

1931 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்காற்றினார். 2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பதவியேற்றார்.

 

 

மாணவர்களையும் , இளைஞர்களையும் அவர் சந்தித்த போதெல்லாம் ”கனவு காணுங்கள்” என்று ஒற்றை வாக்கியத்தை விதைத்துச் சென்றவர். தன் வாழ்நாளில் அதிக நேரத்தை மாணவர்கள் இடத்திலேயே கழித்த அப்துல் கலாம் 2015-ம் வருடம் ஜூலை 27-ஆம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தன் வாழ்நாள் முழுவதும் சாதனை நாயகனாக திகழ்ந்த அப்துல்கலாம் இளைஞர்களின் கனவு நாயகன் ஆகவே இன்றும் வாழ்ந்து வருகிறார் .

அப்துல்கலாமின் பொன்மொழிகள் ::

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் அவரது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்’

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்! இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்!

பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள்.

எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை. ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும்போது, தான் காண்பதைத் தவறாக எடைப்போடக்கூடும்.

இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!

பிரச்சனைகளோடு மல்லுக்கட்டு : 

தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை.

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை.பிரச்சனை வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக  கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் , கனவுகளும் , இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்!

காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!

கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

யாருக்காக நாடே அழுகிறதோ அவர் தான் தலைவன் :

தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.

வெட்டித்தனமாக இருப்பதிலும் , சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இரு!

அதிகமான உணர்வதலில், ஏராளமாகக் கற்றுக் கொள்வதில், நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு!

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

ஒரு மனுஷன் பிரியும்போது அவன் தாய் அழுதா அவன் ஒரு நல்ல மகன், அவன் பிள்ளை அழுதா அவன் ஒரு நல்ல தகப்பன்,  அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதா அவன் ஒரு நல்ல தலைவன்.

அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.

வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும்.

தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு.

 

தூங்க விடாமல் செய்வதே கனவு :

ஒருமுறை வந்தால் அது கனவு. இருமுறை வந்தால் அது ஆசை. பலமுறை வந்தால் அது லட்சியம்.

நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்புக்காக காத்திராதே வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்.

துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை.

வெல்வோம், சாதிப்போம், வேதனைகளைத் துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும்.

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னை தூங்கவிடாமல் செய்வதே.

Categories

Tech |