ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது..? என்று தமிழ்நாடு அரசை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த கோரிய வழக்கில் இந்த கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள் தொடர்பாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
தடையை நடைமுறைபடுத்த தீவிரம்காட்டி வருகிறோம் என தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை வெளியிட சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தனர்.