Categories
தேசிய செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து 4 ஆக்சிஜன் டேங்கர்கள் இறக்குமதி… இந்தியாவிற்கு விரைவில்….!!

இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஜெர்மனியிலிருந்து எந்திரங்கள் இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா நோய்தொற்று இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நாளொன்றுக்கு சுமார் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் சில நாட்களாகவே பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிக அளவில் நிலவுகின்றது. இதன் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் தீவிரமாக முக்கியத்துவம் காட்டத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தியுள்ளார். அதில், “ஆக்சிஜன் வினியோகத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே மற்றும் விமானப் படைகள் ஒருங்கிணைந்து செயல்பட ஆக்சிஜன் வினியோகம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் “என்று ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக நாடு முழுவதும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து ஆக்சிஜனை உற்பத்தி அளவை அதிகரிக்கவேண்டும் படி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆக்சிஜன் வினியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்களில் ஆக்சிஜன் கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்சிஜன் இல்லாத காலியான கண்டனங்களை தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு இந்திய விமானப்படையின் பெரிய விமானங்களை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியா முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதால் எளிதில் கொண்டு செல்லக் கூடிய 23 ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்களை ஜெர்மனியிலிருந்து இறக்குவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த எந்திரங்கள் ஒரு நிமிடத்திற்கு 40 லிட்டர் ஆக்சிஜன் என்ற அளவில் மணிக்கு 2,400 லிட்டர் ஆக்சிடென்ட் தயாரிக்கும் திறனை கொண்டது. இந்த எந்திரங்களை கொண்டுவருவதற்கு ராணுவ விமானங்கள் தயார் நிலையில் இருக்கின்றது. இதனை எங்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டு செல்ல முடியும்.

இந்த எந்திரங்கள் போலவே இன்னும் பல ஆக்சிஜனை உற்பத்தி எந்திரங்களை இறக்குமதி செய்யப்படும் என்று இந்திய விமானப் படையின் உயர் அதிகாரி கூறியுள்ளார். இந்த இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் டெல்லியில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிறைவுபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்பின் ஆக்சிஜன் கிடைப்பதற்கான  எல்லா மாநிலங்களுக்கும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எந்தெந்த தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை முழுமையாககணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |