Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் எங்களுக்கு வேண்டாம்…. மோடி படத்தை கையிலெடுத்த மக்கள்… புலம்பும் இம்ரான் அரசு …!!

நரேந்திர மோடி போன்ற உலக தலைவர்களின் படத்துடன் கூடிய  சுதந்திர பேரணியை பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாணத்தில் போராட்டக்காரர்கள் நடத்தியுள்ளனர் .

1967இல் முதன்முதலாக சிந்து மாகாண தலைவர் ஜிஎம் சையது மற்றும் பீர் முகமது அலி ஆகியோர்  பாகிஸ்தானிடம்  தனி சிந்து தேசம் கேட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஜிஎம் சையதுவின் 117வது பிறந்தநாளையொட்டி பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என்று போராட்டக்காரர்கள் நரேந்திர மோடி போன்ற உலக தலைவர்களின் படத்தை கொண்டு பேரணி நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சிந்து இயக்கத்தின் தலைவர் ஷஃபி முகமது பர்ஃபாத் கூறும்போது, சிந்து மாகாணத்தின் மீது நடத்தப்பட்ட  கடுமையான தாக்குதலுக்குப் பிறகு அதன் தனித்துவத்தை  நாங்கள் காப்பாற்றி வருகிறோம். ஒருங்கிணைந்து வாழும் சகிப்பு தன்மையுடன் எங்கள் பாரம்பரியத்தை நாங்கள்  காக்க விரும்புகிறோம்.

இன்று இஸ்லாமோ – பாசிச பயங்கரவாதத்தினால் சிந்து நாகரிகம் கட்டி போடப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தை  தற்போது பாகிஸ்தான் ஆட்சி செய்து வருகிறது. இங்கு  இஸ்லாமியத்தின் பெயரில் பஞ்சாபிய ஏகாதிபத்தியம் நடைபெற்று வருகிறது. இன்று பஞ்சாபி காலனி ஆதிக்கத்தில் நாங்கள் சிக்கியுள்ளோம்.  அடக்குமுறைக்கு அடிபணிந்து பாகிஸ்தானில் அடிமையாக வாழ நங்கள் விரும்பவில்லை. எனவே எங்கள் சுதந்திர போராட்டத்தை ஆதரிக்குமாறு உலக நாடுகளிடம் கேட்டுள்ளோம். பாசிச இஸ்லாமிய பயங்கரவாத பாகிஸ்தான் அரசிடமிருந்து எங்களுக்கு விடுதலை வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறோம் என்றார்.

Categories

Tech |