கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரு சகோதரிகளை திருமணம் செய்த சம்பவம் சர்ச்சையான நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த உமாபதி என்ற இளைஞன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சகோதரியின் மகளான சுப்ரியா மற்றும் லலிதா என்ற இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து குழந்தைகள் நல துறை அதிகாரிகள் இந்த திருமணம் சம்பந்தமாக மேற்கொண்ட விசாரணையில் சுப்ரியா என்ற பெண்ணிற்கு பேச்சுத்திறன் குறைபாடு உள்ளதால் அவரை யாரும் திருமணம் செய்ய முன்வரவில்லை என்ற காரணத்தினால் அந்த இளைஞனின் சகோதரி தனது இரு மகளையும் தம்பிக்கே திருமணம் செய்து வைத்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து ஒரு மகளுக்கு 18 வயது நிரம்பியதும், மற்றொரு மகளுக்கு 18 வயது நிரம்பாத காரணத்தால் குழந்தை திருமணம் செய்ததாக கூறி உமாபதி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.