நடிகர் சிம்புவின் திருமணம் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தற்போது இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்காக 2௦ கிலோ எடையை குறைத்து பார்ப்பதற்கு சிறு பையன் லுக்கில் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி பேசும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிம்புவின் திருமணம். மேலும் டி ராஜேந்திரன் குறித்தும் தனது மகன் சிம்புவிற்காக தந்தையும், மனைவி லதாவும் பட்ட கஷ்டங்கள் பற்றியும். இதனைத் தொடர்ந்து டி ராஜேந்திரன் தனது மகனுக்காக சொந்தகாரங்களிள் பெண் பார்ப்பதாகவும். முன்னதாகவே தனது இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் சிம்புவிற்கும் எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருவதாகவும் விரைவில் சிம்புவிற்கு திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.