விநாயகருடைய பரிபூரணமான அருள் கிடைக்க விநாயகர் சதுர்த்தியன்று எளிமையாக வழிபடும் முறை.
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து விடுங்கள் கிழக்கு முகமாக நின்று அருகம்புல் தலையில் வைத்து நீராடுங்கள். குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.வேண்டுமானால் சுடு தண்ணீரில் குளிக்கலாம். குளித்து முடித்து பூஜை அறையில் உட்கார்ந்து அவ்வையார் எழுதிய “விநாயகர் அகவல்” என்ற பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். அவ்வாறு படிக்கும்போது நெய்தீபம் எரியுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். படித்து முடித்து தூப, தீபம் காட்டி விநாயகரை வணங்கிவிட்டு அன்றாடப் பணியை தொடரலாம்.
அன்று மாலை வீட்டில் சிறிது எலுமிச்சை சாதம் மற்றும் சுண்டல் தயார் செய்து அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு எடுத்து சென்று விநாயகருக்கு படைத்து வழிபாடு நடத்திவிட்டு அங்கு இருக்கும் மக்களுக்கு அதை சாப்பிடக் கொடுங்கள். பின்பு ஒரு மணி நேரம் கோயிலில் அமைதியா உட்கார்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி ஓம் நமோ விநாயகா நம! என்ற விநாயகப் பெருமானுடைய மந்திரத்தை குறைந்தது 108 முறை சொல்லி வழிபாடு நடத்தி வீடு திரும்புங்கள். விநாயகருடைய பரிபூரணமான அருள் உங்களுக்கு கிடைக்கும்.