Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…உதவிகள் கிடைக்கும்…உழைப்பு கொஞ்சம் தேவை..!!

சிம்மம் ராசி அன்பர்களே,  இன்று உறவினர்களின் வகையில் உதவிகள் கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். தடைகள் அனைத்தும் விலகி செல்லும். வாழ்க்கையில் வெற்றி பாதையை நோக்கி எடுத்துச் செல்கிறீர்கள். இன்று  மனம் கொஞ்சம் அமைதியாகவே காணப்படும். சகோதரர் வழியில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு கையில் வந்து சேரும்.

அதுமட்டுமில்லாமல் இன்று உடல் உழைப்பு கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள், குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும் பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை கூடும். உறவினர்களின் மத்தியில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

இன்று ஓரளவு செலவு இருக்கும். அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் கடுமையான முயற்சியின் பேரில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். விளையாட்டுத் துறையில் அதிக அளவு ஆர்வம் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |