சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் மனதில் இருந்த தயக்கம் விலகிச் செல்லும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் கேட்ட உதவியை இன்று நீங்கள் செய்து கொடுப்பீர்கள். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும்.
மனம் இன்று கொஞ்சம் அலைபாய கூடும். இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் அமைதியாக இருக்கும். ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். அதுமட்டுமில்லாமல், பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கும் நல்ல லாபகரமான சூழல் இன்று இருக்கு. இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். தாய் தந்தையரின் உடல் நலத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
இன்று மாணவர்களுக்கு கொஞ்சம் கடினமான சூழல் இருக்கும். கூடுமானவரை கடினப்பட்டு பாடங்களை படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.