Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு.. நிதானம் தேவை.. கடன் வாங்காதீர்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்கள், இன்று முக்கிய செயல் கொஞ்சம் தாமதமாகலாம் தொழில் வியாபாரம் செழிக்க  நண்பரின் ஆலோசனை உதவும்,  குறைந்த அளவில்தான் பண வரவு கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனதிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.

பெண்களுக்கு மன தடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது, தேவையான உதவிகள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும், பிள்ளைகளின்  முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். அதுமட்டுமில்லாமல் இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.  எழுதிப்பாருங்கள் அதாவது எந்த ஒரு பாடத்தையும் படித்த பின்பு எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பு.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு

Categories

Tech |