Categories
சினிமா தமிழ் சினிமா

ஒத்த செருப்பு ஹிந்தி ரீமேக்…. என்ன பெயர் வைக்கலாம்…. பார்த்திபன் கேள்வி….?

ஒத்த செருப்பு திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பார்த்திபன் கேட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 எனும் திரைப்படத்தை பார்த்திபன் தனி ஒருவனாக இயக்கி, தயாரித்து, நடித்து இருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் உலகத்தரத்திற்கு உயர்ந்த பார்த்திபனை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர். மேலும் இத்திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

சமீபத்தில் இத்திரைப்படத்தை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப் போவதாக பார்த்திபன் அறிவித்திருந்தார். அதன்படி இத்திரைப்படத்திற்கு ஹிந்தியில் என்ன பெயர் வைக்கலாம். அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும் என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். பார்த்திபன் வெளியிட்டுள்ள இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கமண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Categories

Tech |