‘மாநாடு ‘படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில் அவர், ”உங்கள் மொபைல் போனில் காட்சிகளை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இது ஒரு குற்றச் செயல். திரையரங்குகளில் மட்டுமே சினிமா அனுபவத்தை அனைவரும் அனுபவிப்போம்” என பதிவிட்டுள்ளார்.
#Maanaadu மீது நீங்கள் ஒவ்வொருவரும் காட்டும் அதீத அன்பிற்கு நன்றி. உங்கள் மொபைல் போனில் காட்சிகளை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! இது ஒரு குற்றச் செயல்! திரையரங்குகளில் மட்டுமே சினிமா அனுபவத்தை அனைவரும் அனுபவிப்போம் 🙏🏽🙏🏽 https://t.co/7AxX0zf5T7
— venkat prabhu (@vp_offl) November 28, 2021