பிரபல நடிகர்கள் சிம்பு மற்றும் விக்ரமின் படங்கள் ஒரே நாட்களில் வெளியிடப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சிம்பு தற்போது “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார்.சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதேபோல் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள “கோப்ரா” படமும் ரம்ஜானை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரம்ஜானை ஒட்டி வெளியிடப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.