Categories
சினிமா

எதுக்குங்க விவாகரத்துலா…? தனுஷுக்கு சிம்பு அட்வைஸ்…. தனுஷ் மன மாற்றம்…?

நடிகர் சிம்பு விவாகரத்து வேண்டாமென்று தனுஷுக்கு அறிவுரை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு மற்றும் தனுஷுக்கு இடையில் கடும் போட்டி நிலவினாலும், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று தெரிவித்தனர். சமீபத்தில் நடிகர் தனுஷ், தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்தது, திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் மீண்டும் இருவரும் இணைய வேண்டும் என்று கூறிவருகிறார்கள். குடும்பத்தினரும் இருவரையும் சேர்த்து வைப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சிம்பு, தொலைபேசியில் தனுஷை தொடர்பு கொண்டு விவாகரத்து முடிவை மாற்றுமாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல சம்பவங்களை உதாரணமாக எடுத்துக்கூறி வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அறிவுரை கூறியதாக கூறப்பட்டிருக்கிறது. அவரின் அறிவுரையை கேட்ட பின் தனுஷ் சிறிது மனம் மாறியிருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |