சிஎஸ்கே அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளர் பெஹ்ரன்டார்ஃப் வருகையால் ரசிகர்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர் .
இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி, இதுவரை நடந்த 2 போட்டிகளில் , ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த ,பந்துவீச்சாளர் ஹேசல்வுட், இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதனால் சிஎஸ்கே அணி முதல் போட்டியிலேயே பில்டிங், சரியாக அமையாமல் தோல்வியை சந்தித்தது. ஆனால் அதற்குப் பதிலாக மாற்று வீரர் சிஎஸ்கே அணியில் இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை சிஎஸ்கே வீரர்கள் ஆர்வமுடன்
எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
தற்போது ஹேசல்வுட்க்கு பதிலாக ,ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ,ஜேசன் பெஹ்ரன்டார்ஃப் அறிவிக்கப்பட்டுள்ளார் . இதனால் சிஎஸ்கே அணியில் பெஹ்ரன்டார்ஃப் எப்போது இணைவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. தற்போது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக, பெஹ்ரன்டார்ஃப் அவருடைய ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார் . அதில் விரைவில் சிஎஸ்கே வை ஐபிஎல் தொடரில் சந்திக்கப் போவதாகவும், ‘ஐபிஎல் போட்டிக்காக காத்திருக்க முடியவில்லை’, என்று ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன.
See you soon @ChennaiIPL can’t wait for @IPL pic.twitter.com/tdowHqeIqa
— Jason Behrendorff (@JDorff5) April 18, 2021