அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், ஒரு நபர் சீக்கிய ஓட்டுனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கடந்த 4 ஆம் தேதி அன்று, ஜான் எப்.கென்னடி என்ற சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியில், சீக்கியரான ஒரு டாக்ஸி ஓட்டுனர் காத்திருந்துள்ளார். அப்போது, திடீரென்று ஒரு மர்ம நபர் அவரை கடுமையாக தாக்கி அடித்து உதைத்திருக்கிறார்.
இதனை ஒரு நபர் வீடியோ எடுத்து இணைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். அதில், அந்த சீக்கிய ஓட்டுனரை பார்த்து அந்த நபர், கடுமையான வார்த்தைகளால் திட்டி பலமாக தாக்கியது பதிவாகியிருக்கிறது. மேலும் அவரது தலைப்பாகையை கீழே தள்ளிவிட்டிருக்கிறார். அவர் எதற்காக திடீரென்று அந்த சீக்கியரை அடித்தார்? என்று தெரியவில்லை. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.