சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள்
சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் முதுகு புறம் மற்றும் வயிற்று பகுதிகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும் .
சிறுநீரக பாதைகளில் இந்த கல் நகர்ந்து செல்லும் போது கடுமையான வலியை ஏற்படுத்தும் .
சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் ஏற்படும் .
சிறுநீர் ஒருவித நாற்றத்துடன் இருக்கும் .
சிறுநீரில் சிறு சிறு சரளை கற்கள் தென்படும் .
அடிக்கடி குமட்டல் ,வாந்தி உணர்வு , காய்ச்சல் போன்றவை ஏற்படும் .
அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம் .
சிறுநீருடன் இரத்தம் கலந்து வருதல் .
சிறுநீரக கல் முற்றிய நிலையில் இருந்தால் வலி அதிகமாகி உட்கார, படுக்க முடியாத சிரமம் ஏற்படும் .