Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: சிஏஏவுக்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் – முக ஸ்டாலின்..!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன்  குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதில் மதிமுக, விசிக, தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முக ஸ்டாலின், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்து மக்களை பாதிக்கக்கூடிய குடியுரிமை திருத்த சட்டம் திரும்பப் பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கக்கூடிய எந்த முயற்சியும் எடுக்க கூடாது. தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்கிற இந்த தீர்மானங்களை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம் என்றார்.

மேலும் தமிழகம் முழுவதும் இருக்ககக்கூடிய மக்களை சந்தித்து ஒரு மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நடத்துவது என்று முடிவு செய்து இருக்கிறோம். அந்த கையெழுத்து இயக்கத்தை வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதியில் இருந்து 8-ம் தேதி வரையில் நடத்தி பெறக்கூடிய அந்த  கையெழுத்து இயக்கத்துக்கு பின் பிரதிகளை பெற்று இந்திய நாட்டினுடைய ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து வழங்குவது என்று முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

இந்த கையெழுத்து இயக்கத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநகரத்தில், ஒன்றியங்களில் நகரங்களில், கிளைகளில், ஊராட்சி பகுதிகளில் ஒன்றிய பகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய எல்லா கட்சிகளும் நிர்வாகிகளும் அதில் பங்கேற்று பணியை நிறைவேற்ற வேண்டும். கட்சிக்கு அப்பாற்பட்ட கட்சி சார்பற்ற பொதுமக்கள் மாணவர்கள்  அத்தனை பேரும் ஆதரவு தர வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Categories

Tech |