இருநாடுகளுக்குமிடையே கனிமவளத்துறையை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ஓமன் கையெழுத்திட்டுள்ளதாக மஸ்கட்டிலுள்ள இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஓமன் நாட்டின் எரிசக்தி கனிமவளத் துறை செயலாளர் மற்றும் இந்திய நாட்டின் தூதர் ஆகியோர் கனிம வளத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் இருவரும் இரு நாடுகளுக்குமிடையேயான கனிம வளத்துறையின் செயல்பாடுகளை அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏற்றவாறு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
இதிலும் முக்கியமாக இரு நாடுகளுக்மிடையே கலியுக முறையில் கனிம வளத்தை பெறுவதற்கான தகவல் பரிமாற்றத்திற்கும் இந்த கையெழுத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கனிம வளத்துறை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய மற்றும் ஓமன் நாட்டின் பல அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த தகவலை மஸ்கட் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.