Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் இறந்த அக்கா, தம்பி…. அதிர்ச்சியில் பெற்றோர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தரமற்ற இனிப்புகளை சாப்பிட்ட அக்கா, தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நரசிங்கநல்லூர் தொகுதியில் பழனி சென்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பாஞ்சாலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆஷானி என்ற மகளும், ஹரி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழனி தனது குழந்தைகளுக்கு கடைவீதியில் விற்ற இனிப்புகளை வாங்கி தந்துள்ளார். அதனை சாப்பிட்ட இரு குழந்தைகளுக்கும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இருவரும் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர் இரு குழந்தைகளையும் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆஷானி பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஹரி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் ஹரியும் பரிதாபமாக இறந்து விட்டான். இச்சம்பவம் குறித்து விசாரித்தபோது தரமற்ற பழைய இனிப்பு வகைகளை குழந்தைகள் சாப்பிட்டதால் தான் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. தனது இரு குழந்தைகளையும் இழந்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |