பெண் போலீசிடம் ஆபாசமாகப் பேசிய இரயில்வே காவல் நிலைய எஸ்.ஐ சரவணனை பணி இடைநீக்கம் செய்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், இரயில்வே காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் தான் சரவணன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்தார். அப்போது, அவருக்குக் கீழ் பணிபுரிந்து வரும் திருமணமாகாத பெண் போலீஸ் ஒருவரிடம் போனில் ஆபாசமாகப் பேசியுள்ளார்.
பெண் காவலரை, தனது ஆசைக்கு இரையாக்க முயற்சி செய்துள்ளார். அதாவது நைட் 1 மணிக்கு வருகிறேன் கதவை திறந்து போடு, கட்டிப்பிடிப்பேன் ஆனால் ஒன்னும் செய்ய மாட்டேன் என்று தொடர்ந்து பேசியுள்ளார்.. இருப்பினும், பெண் காவலர் கடைசி வரை ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டு, திரும்ப அழைப்பதாகக் கூறி, போனின் இணைப்பைத் துண்டித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பெண் காவலர் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.
இந்தநிலையில் தான் இருவரும் பேசிய ஆடியோ நீண்ட மாதங்களுக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்த தகவலறிந்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார், இரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் எஸ்ஐ சரவணனை பணியிடை நீக்கம் செய்து, உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
அந்த பெண் போலீஸ் தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தினை சேர்ந்தவர்.. சென்னையில் பணியாற்றிய சக ஆண் காவலருடன் ஏற்பட்ட நெருக்கமான உறவு, பிரச்னையை ஏற்படுத்திய நிலையில் திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் அந்த பெண் போலீஸ். இந்த விவகாரம் எஸ்ஐ சரவணனுக்கு தெரிய வந்ததால் அதை காரணம் காட்டியே இப்படி ஆபாசமாக பேசியுள்ளார்.