Categories
மாநில செய்திகள்

இது குறித்து தெரிந்தால்…. இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…!!

கள்ளச்சாராயம் காய்ச்சுவது குறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்க தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இதை குடித்து சில சமயங்களில்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் வட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் மற்றும் எரிசாராயம் விற்பனையாகி வருவதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் வாட்ஸ்அப் மற்றும் டுவிட்டரில் புகார் அளிக்கலாம் என மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் 6374111389 என்ற வாட்ஸ் அப் எண், @manithan _ yes என்ற டுவிட்டர் பக்கம், 10581 என்ற 24 மணி நேர தொலைபேசி எண்களிலும் புகார் தரலாம். புகார் கொடுக்கும் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |