பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் சிங்கிளான பேஷ்ரம் ரங் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தீபிகா படுகோனே இதுவரை இல்லாத அளவுக்கு பிகினியில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என இந்துக்கள் கூறி வருகிறார்கள்.
ஏனெனில் இந்த பாடலில் தீபிகா காவிநிற பிகினி உடையை அணிந்திருப்பதோடு பேஷ்ரங் என்ற வார்த்தைக்கு வெட்கமற்ற நிறம் என்பது அர்த்தமாம். இதன் காரணமாக இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, மத்திய மந்திரி நரோட்டம் மிஸ்ராவும் பதான் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து படத்தை திரையிட அனுமதி மறுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இந்நிலையில் பதான் திரைப்படத்திற்கு நடிகை கஸ்தூரி மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்து டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளனர். அதன்படி நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், காவிநிற உடை அணிந்தவர்கள் சிறுமிகளை கற்பழிக்கிறார்கள். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள்.
வெறுப்பு பேச்சு பேசுகிறார்கள். ஆனால் காவி நிற உடை அணிந்து திரைப்படத்தில் மட்டும் நடிக்கக் கூடாதா என கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோன்று நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில், நரோட்டம் மிஸ்ரா போன்ற பல அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுபடுவதை தீபிகா படுகோனே ஒரே பாடலின் மூலம் 30 வினாடிகளில் செய்துள்ளார். அவர் காவி நிறத்தை இந்தியாவின் விருப்பமான உடையாக மாற்றியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் கஸ்தூரியின் பதிவுக்கு ஏராளமான ஒரு கமெண்ட்ஸ்கள் குவிந்து வருவதோடு ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.