Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல்வாதியின் பிள்ளைகள் அரசியலுக்கு வரக்கூடாதா ? வாரிசு அரசியல் விமர்சனத்துக்கு அமைச்சர் பதிலடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதிக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று திமுகவில் சொல்கிறவர் என்று யாரும் கிடையாது, ஏன் இவ்வளவு தாமதமாக கொடுக்கிறார்கள் என்று தான் எல்லோருமே கேட்டு இருக்கிறார்கள்….  திமுக இளைஞர் அணியை கண்டவர்கள் எல்லாம் முதலில் இருந்தே கேட்கிற கேள்வி அதுதான், ரொம்ப காலதாமதமாக முதலமைச்சராக அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

வாரிசு அரசியல் என  வழக்கமாக விமர்சனம் வைப்பது தானே. இது ஒன்னும் புதிது கிடையாது, தளபதி வரும்போது இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.  அது ஒன்னும் புதிது கிடையாது, அதெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும், அவர்கள் தெரிந்து இதை செயல்படுத்துவார்கள்.

இதை பொருத்தவரையில் அரசியலில் வாரிசாக எத்தனை பேர் இருக்கிறார்கள் ? 10% வாரிசு அரசில் இருக்குமா ? வாரிசே இருக்க கூடாதா ? அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இருக்கக் கூடாது என்று எங்கேயாவது இருக்கிறதா ? சட்டமன்றத்திலேயே எடுத்துக் கொள்ளுங்கள்…

100 பேர் இருந்தால் 10 பேர் வாரிசாக இருப்பார்கள், மீது 90 பேர் நேரடியாக வந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.  இது எல்லா கட்சியிலும்,  எல்லா இடத்திலும் இருப்பதுதான் தப்பு இல்லை, அந்த அடிப்படையில் ஒரு 10 %  வாரிசு அரசில் இருக்கும், மீதி எல்லாம்பொதுவாக தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்கள்,  நியமிக்கப்படுபவர்கள் தான் என தெரிவித்தார்.

Categories

Tech |