Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காய்கறிகள் நீண்ட நாள் கெடாமல் இருக்க வேண்டுமா? … எளிதில் வீணாகாமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ள நிலையில் அனைவரும் இரண்டு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்திருப்போம். ஆனால் அவற்றை சரியாக பராமரித்து வைத்தால் மட்டுமே அது கெட்டுப்போகாமல் இருக்கும். காய்கறிகள் எளிதில் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.

  • பச்சை மிளகாயை காம்புடன் வைத்திருந்தால் சீக்கிரம் வாடி போய் விடும். சீக்கிரம் வாடி போகாமல் இருக்க பச்சை மிளகாயை காம்பை நீக்கி விட்டு வைக்க வேண்டும். இதனை ஒரு டிஸ்ஸு பேப்பரில் சுற்றி காற்று புகாத கவரில் வைக்கலாம்.
  • பச்சை பட்டாணி விலை மலிவாக கிடைக்கும் போதே அதை தோல் உரித்து எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அதன் வாய்ப் பகுதியை நன்கு இருக்க கட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து விட வேண்டும். இப்படி செய்தால் பல மாதங்கள் பட்டாணி அதன் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.
  • பீன்ஸ் 2 வாரம் கெடாமல் இருக்க அதன் இரு முனைகளிலும் வெட்டி விட்டு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து குளிர்சாதன பெட்டியில் விடுங்கள்.
  • கொத்தமல்லியை அதன் கீழ் வேர்களை வெட்டி விட்டு, அதன் தண்டுடன் சேர்த்த இலை பகுதியை ஒரு கண்ணாடி குடுவையில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி அதில் வைத்து விட்டால் இரண்டு வாரம் அழுகாமல் இருக்கும்.
  • கீரையை ஆய்ந்து வைத்து விட்டு ஒரு கவரில் குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டால் கெடாமல் இருக்கும்.
  • கேரட் நீண்ட நாள் வர வேண்டும் எனில் ஒரு ஜிப் லாக் பையில் அதன் ஈரத்தை நன்கு துடைத்து விட்டு வைக்க வேண்டும்.
  • எலுமிச்சையை காற்று புகாத கவரில் வைத்து விட்டால் 4 வராமல் கூட கெடாமல் இருக்கும்.
  • இஞ்சி தேவையான அளவிற்கு மேல் இருந்தால் அந்த இஞ்சியை மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றினால் போதும். தேவை படும் போது எடுத்து பயன்படுத்தலாம். இஞ்சி காய்ந்துப் போகாது.
  • முள்ளங்கியை ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டால் கெடாமல் இருக்கும்.
  • வெங்காயத்தை கூடையில் வைக்காமல் தரையில் வைக்க வேண்டும். கூடையில் வைத்தால் எளிதில் அழுகும் வாய்ப்புள்ளது.
  • வாழைக்காய் கெடாமல் இருக்க தண்ணீரில் வாழைக்காயை போட்டு வைக்கவும். ஒரு வாரம் வரை வாழைக்காய் கெடாமல் இருக்கும்.
  • குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கும் முன் காய்கறிகளை கழுவினால் அதனை நன்றாக வடித்து வைக்கவும். ஏனென்றால் அதிகப்படியாக ஈரப்பதத்தால்அழுகிப் போகக் கூடும்.

Categories

Tech |