அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை வழங்கியுள்ளது.
அமேசான் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட தொடர் தேதிகளில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி வருவார்கள். அதில் பொருட்கள் அதிக அளவிலான தள்ளுபடியில் மிக குறைந்த விலையில் கிடைக்கும். அந்த வகையில் அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 6, 7 ஆகிய தேதிகளில் சிறப்புத் தள்ளுபடிகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதில், ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
மேலும் ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வரை சலுகை, கேமரா, ஹெட் போன் உள்ளிட்ட பொருள்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் இந்த ஒரு அரிய வாய்ப்பை தவறவிடாமல் தங்களுக்கு விருப்பப்பட்ட பொருட்களை ஆகஸ்ட் 6, 7 ஆகிய தேதிகளில் விலை குறையும் பட்சத்தில் வாங்கி பயனடைந்து கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.