ஆகஸ்ட் 10-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து வணிகர் சங்கங்களின் தலைவர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசும் அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கோயம்பேடு சந்தையில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் வேறுபகுதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் மீண்டும் கடைகளை திறக்க அனுமதிக்க கோரி ஆகஸ்ட் 10ம் தேதி முதல் காய்கறி பழம் மற்றும் கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சந்தையை திறப்பதற்கான சூழல் வந்துள்ளதால், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.